Tuesday, August 17, 2010

பொதுவான அழகுக் கு‌றி‌ப்புக‌ள்

வெயிலில் செல்லும் முன் முகத்திற்கு தடவும் சன்ஸ்கிரீன் லோஷனை கையிலும் மறக்காமல் தடவவும்.

லிப்ஸ்டிக் (உதட்டுச் சாயம்) தடவுவதற்கு முன் கோல்ட் கிரீம், மாய்ஸ்சுரைஸர் மற்றும் லிப் பாம் தடவவும்.

இது மட்டுமில்லாமல் நேராக நிமிர்ந்து நடப்பதும் உங்கள் முதுகிற்கு அழகை சேர்க்கும்.

நடக்கும் போதும், உட்காரும் போதும் தலையை நிமிர்த்தி தோள்பட்டையை பின்பக்கம் தள்ளிய படி இருக்கவும்.

உலர்ந்த காற்று மற்றும் வெயில் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாத்துக் கொள்ளவும். நீச்சல் பயிற்சிக்குப் பின், நல்ல நீரில் குளித்து உப்பு தண்ணீர் மற்றும் குளோரின் ஆகியவற்றிலிருந்து உடம்பை பாதுகாக்கவும்.


கண் இமைகள் மற்றும் புருவம் அழகு

கண் இமைகள் மற்றும் புருவம் அழகாகவும் அடர்தியாகவும் இருக்க....


தினமும் இரவு கண் இமைகளிலும் புருவதிலும் விளக்கெண்ணை தடவி வரவும். இவ்வாறு செய்து வர,கண்கள் அழகு பெரும்.உடல் சூட்டை தனிக்கும்.


இதனை நான் தினமும் செய்து வருகிறேன்,அதனால் என் இமைகள் அடர்தியாக உள்ளது. நீங்களும் செய்து பாருங்கள்!பலன் பெருங்கள்!

அழகுக்குறிப்பு

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது


குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.


இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

அழகுக்குறிப்பு

உதடு சிவப்பாக செய்ய வேண்டியவை:



அதிக குளிர் மற்றும் வெப்பத்தை தாங்க முடியாமல், சிலருக்கு உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும். மேலும் சிலருக்கு உதடுகள் கறுத்தும், வெடிப்புகளுடனும் காணப்படும்.



                  இவற்றிற்கான சிகிச்சை முறைகள்:



பாலேட்டுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், கறுமை மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.






வெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தால், வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.






லிப்ஸ்டிக் போட்டு கொள்வது எப்படி? : சிலருக்கு தங் கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை.

அழகு குறிப்புகள்

உதடுகளில் ஏற்படும் பொதுவான பிரச்னைகள்:

கொழுப்புச் சத்து குறையும் போது, உதடுகள் சுருங்கி வயதான தன்மையை அடைகின்றன. இதனால் உதடுகளில், "வாசலின்' தடவிக் கொள்ளலாம்.வைட்டமின்கள் குறைபாட்டினால், உதடுகளின் ஓரத்தில் புண்கள் வரலாம். இதற்கு உணவில் கீரைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும். மேலும், நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். வாய்ப் பகுதியை சுற்றி உதடுகளின் ஓரத்தில் உள்ள புண்கள் மற்றும் கொப்புளங் கள்
மறைய, வைட்டமின், "இ' சத்துகள் நிறைந்த, "சன்ஸ்கிரீன் லோஷனை' தடவி வரலாம். கறுத்த அழகு.

அழகுக்குறிப்பு

அடர்த்தியான தலைமுடிக்கு



1.வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும்.பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.



2.தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,

அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.



3.ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.

(கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும்.

பலன் கிடைக்கும்)

வணக்கம்.

உலக தமிழர் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.



இந்த தளத்தின் மூலம் என்னுடைய கருத்துக்களை தங்களிடம்


பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.